மழைநீர் தேங்கியதால் சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

மழைநீர் தேங்கியதால் சுரங்கப்பாதையில் சிக்கிய கார்
X

சுரங்கப்பாதையில் சிக்கிய கார் 

உடுமலை பாலப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்குவதால், பயணிகள் அவதியுறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பாலப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மருள்பட்டி, கண்ணமநாயக்கனுார், கிழவன்காட்டூர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த ரயில்வே பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மழையின் போது, இந்த பாலத்தில் தங்கும் மழைநீரால், வாகனங்கள் தத்தளிக்கின்றன. எனவே, சம்மந்தப்பட்ட துறையினர் ரயில்வே பாலத்தில், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!