உடுமலையில் புத்தக திருவிழா
உடுமலையில், 9-ம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது.
புத்தகத்திருவிழா துவக்க விழா, வரவேற்பு குழு தலைவர் நாகராஜ் தலைமை வகித்து பேசினார். புத்தக கண்காட்சியை நகராட்சி தலைவர் மத்தீன் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவங்கி வைத்தார். உடுமலை புத்தகாலயம் சிறப்பு ஆலோசகர் செல்லதுரை, உடுமலை பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஆடிட்டர் கந்தசாமி, தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் சத்யம்பாபு, நூலக வாசகர் வட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து மடத்துக்குளம் வீரமணி தலைமையில், பகத்சிங் களரி குழுவினரின் சிலம்பாட்டம் நடந்தது. விழா வரவேற்பு குழு செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
புத்தகத்திருவிழா வரும் 25-ம்தேதி வரை நடக்கிறது.இதற்காக பல்வேறு முன்னணி பதிப்பகங்களின், 32 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவையொட்டி தினமும் மாலை, சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu