உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
X

Tirupur News- உடுமலைப் பகுதியில், பறவைகள் கணக்கெடுப்பு பணி, ஏரிகள் மற்றும் குளங்களில் நடந்து வருகிறது.

Tirupur News- உடுமலைப்பேட்டையில், பறவைகள் கணக்கெடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது.

Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடந்து வருகிறது.

அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது

இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil