தேனீக்கள் கொட்டியதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

தேனீக்கள் கொட்டியதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
X
உடுமலை அருகே கோவில் திருவிழாவின் போது தேனீக்கள் கொட்டியதில் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம் பட்டியில் உள்ளது ராஜாகாளியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் வருடம் தோறும் திருவிழா கோலகலமாக நடக்கும் இதில் சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் இவ்வருடமும் வழக்கம் போல் நடைபெற்றுவரும் இத்திருவிழாவில் இன்று சமையலுக்காக கோவில் அருகே மரத்தடையில் விறகு மூட்டி எரித்தபோது எழுந்த புகையால் மரத்திலிருந்து தேனிக்கள் பறந்து பக்தர்களை கொட்டியது. திடீரென தேனீக்கள் பறந்து கொட்டியதால் பக்தர் அலறி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ஆம்புலன்கள் வரவழைக்கபட்டு, பாதிக்கபட்ட 30 கும் மேற்பட்டோரை ஏற்றி உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. கோவில் திருவிழாவில் எதிர்பாரத விதமாக தேனீக்கள் புகுந்து பக்தர்களை கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story