குழந்தைகளே உஷார்…பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளே உஷார்…பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பைல் படம்.

பெண் குழந்தைகள், தங்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் குறித்த தகவலை, 1098 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கொடிங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவினர் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் ராஜ் கண்ணன் தலைமை வகித்தார். ஆய்வாளர் சுமதி, 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண் குழந்தைகள், தங்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் குறித்த தகவலை, 1098 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. புகார் தருவோர் பெயர் ரகசியம் காக்கப்படும் எனவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!