கலை, இலக்கிய போட்டி: மாணவர்கள் அசத்தல்

கலை, இலக்கிய போட்டி: மாணவர்கள் அசத்தல்
X

பைல் படம்.

கலை, இலக்கியப் போட்டிகளில் உடுமலை பள்ளி மாணவர்கள் அசத்துகின்றனர்.

உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 840 மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்களில் பலர், கலை இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

அதன்படி, 2021– -2022ம் ஆண்டுக்கான 'கலா உத்சவ்' ஓவியப் போட்டியில், உடுமலை கல்வி மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மாணவி பானுமதி, மூன்றாமிடம் வென்றார். கோவையில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 13 வயது பிரிவில், 8ம் வகுப்பு மாணவன் வீரநரசிம்மன், இரண்டாமிடம் வென்றார். இவர்களுக்கான பாராட்டு விழா, பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

சாதித்த மாணவர்களை, பள்ளி உதவித் தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மாரிமுத்து, ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சலுகாமா, விஜயராகவன் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!