தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு

தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு
X

உடுமலைப்பேட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில், டோக்கன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவில்லை என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதும்க்கள்.  

உடுமலைப்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற , தடுப்பூசி போடும்போது சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று காலை 6 மணி முதலே, டோக்கன் பெற்றவர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு சென்றனர்.

இந்நிலையில் டோக்கன் இல்லாமல் சில முக்கிய பிரமுகர்கள் வந்து, கியூ வரிசையில் நிற்காமல் தடுப்பூசி போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தடுப்பூசி போட வந்தவர்கள், அங்கிருந்த சுகாதார பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் சிலர் கூறுகையில், நாங்கள் பல நாட்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் பெற்றோம். டோக்கனில் தேதியிட்டு வழங்கப்பட்டது. அதன்படி, இன்று காலையிலேயே வந்து வரிசையில் நின்றோம். தடுப்பூசி போடும் பணி நடந்தபோது, முக்கிய பிரமுகர்கள் என கூறி, வரிசையில் நிற்காமல் உள்ளே சென்று தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

டோக்கன் வாங்கிக்கொண்டு நீண்ட நேரம் கியூ வரிசையில்நாங்கள் காத்திருக்கிறோம். எவ்வளவு டோஸ் வந்து உள்ளது என்பது கூட தெரியவில்லை. டோஸ் தீர்ந்து விட்டால், அடுத்த முறை வாருங்கள் என்று அனுப்பி விடுவார்கள். எனவே, டோக்கன் வழங்கியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும், என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!