அமராவதி அணையில் நீர்மட்டம் சரிவு; விவசாயிகள் கவலை

அமராவதி அணையில் நீர்மட்டம் சரிவு; விவசாயிகள் கவலை

Tirupur news- அமராவதி அணை ( கோப்பு படம்)

Tirupur news- கடுமையான வெயில் காரணமாக அமராவதி அணையில் நீர்மட்டம் சரிவடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tirupur news, Tirupur news today- உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு கடந்த 66 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது. ஆனாலும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதனால் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி காத்துள்ளனர். அதற்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைந்து வடகிழக்கு பருவ மழையால் ஏற்படுகின்ற நீர் இருப்பை தேக்கி வைக்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.98 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
Similar Posts
அமராவதி அணையில் நீர்மட்டம் சரிவு; விவசாயிகள் கவலை
திருப்பூரில்  வெட்டப்பட்ட பழமையான மாமரம்: குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி
உடுமலை-மூணாறு சாலையில் யானை நடமாட்டம் அதிகரிப்பு - வனத்துறை தீவிர கண்காணிப்பு
பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ஈரோடு கல்யாண ராணி கைது
திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு
திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!
திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்  வேட்பாளர் 1,06,003 வாக்குகள் முன்னிலை
திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 57,306 வாக்குகள் முன்னிலை..!
மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
வனவிலங்குகளின் தாகம்  தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும் யானைக் கூட்டம்
பீன்ஸ் விலை வீழ்ச்சி; உடுமலை விவசாயிகள் கவலை