நிரம்பியது அமராவதி அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நிரம்பியது அமராவதி அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

அமராவதி அணையின் எழில்கு தோற்றம் .

உடுமலைப்பேட்டை, அமராவதி அணை திறந்து விடப்பட உள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. உடுமலைபேட்டையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்ப துவங்கியுள்ளன. இதில், 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால், அணையில் இருந்து உபரிநீர் விரைவில் திறக்கப்பட உள்ளது. எனவே, கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, நீர்வள ஆதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!