அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.15 லட்சம டன் கரும்பு அரவை இலக்கு
உடுமலைப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் அமராவதி அணை, திருமூர்த்தி அணையின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பாசனப்பகுதியில் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பதிவு செய்யப்படும் கரும்பு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் அரவை செய்யப்படுகிறது. நடப்பாண்டுக்கான அரவை கடந்த ஏப்.,16 ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான கரும்பு அரவைக்கு தேவையான கரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில்,
அடுத்த ஆண்டு அரவை இலக்காக 2.15 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அடுத்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பதிவு துவங்கும். அடுத்த ஆண்டு இலக்காக 2.15 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 4,500 ஏக்கர் கன்னி கரும்பு, 1.500 ஏக்கர் கட்டை கரும்பு உற்பத்திக்கு, பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நடப்பு நடவு செய்யும் கரும்புக்காக, அமராவதி அணையில் இருந்து மே.ஜூன், ஜூலை மாதத்தில் , 10 நாட்கள் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu