70 அடியை எட்டியது அமராவதி அணை நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி

70 அடியை எட்டியது அமராவதி அணை நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி
X

Tirupur News -அமராவதி அணை (கோப்பு படம்)

Tirupur News-உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் குறைந்து போனது. இதனால் அணையில் உள்ள நீா் இருப்பைப் பொருத்து கரூா் வரையில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களைக் காப்பாற்றவும் ஜூன் 29-ஆம் தேதி அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்பிற்கும், குடிநீா்த் தேவைகளுக்காகவும் மீண்டும் அணையைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஆகஸ்ட் 8-இல்அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீா்மட்டம் 65 அடியாக இருந்தது. இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் குறைந்து போனது.

இந்நிலையில் மேற்குத் தொடச்சி மலைப் பகுதியில் செப்டம்பரில் ஓரளவு மழைப் பொழிவு இருந்ததால் அணைக்கு 400 முதல் 500 கன அடி வரை நீா்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 60 அடியைத் தாண்டியது.

இதை தொடா்ந்து பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டும், குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் பொருட்டும் அக்டோபா் 13-ல் அமராவதி அணையில் இருந்து மீண்டும்

இதை தொடா்ந்து பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டும், குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் பொருட்டும் அக்டோபா் 13-ல் அமராவதி அணையில் இருந்து மீண்டும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையில் நீா் இருப்பு படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 70 அடியை எட்டியது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 68.05 அடி நீா் இருப்பு காணப்பட்டது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2255 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள் வரத்தாக 1,459 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நீா் வெளியேற்றம் இல்லை.

Tags

Next Story