பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
X

உடுமலை, பஞ்சலிங்க அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.

Tirupur News Today Tamil - தண்ணீர் வரத்து குறைந்ததால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tirupur News Today Tamil -உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள், அருவிக்கு நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. வனப்பகுதியில் பல்வேறு விதமாக பாய்ந்து வரும் ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. அப்போது நீர் வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன், மூலிகை குணத்தையும் நறுமணத்தையும் கொண்டு உள்ளது. அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெருவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் சாரல் மலையும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பதும் பின்பு குறைவதுமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டு முறை காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த தண்ணீர் அடிவார பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவில், விநாயகர், சுப்பிரமணியர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அவ்வப்போது கோவில் நிர்வாகம் தடை விதித்து வருகிறது.இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

நேற்று அருவியில் தண்ணீர் சீற்றம் குறைந்து காணப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாக அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil