காற்றுக்கு திணறும் பரிசல்கள்: மீட்க உதவும் மோட்டார் படகு
X
அமராவதி அணை பகுதியில், காற்றுக்கு திணறும் பரிசல்களை மீட்க மோட்டார் படகு பயன்படுத்தப்படுகிறது.
By - Mukil_Reporter |7 Nov 2021 9:30 AM IST
காற்றுக்கு திணறும் பரிசல்களை, இழுத்துவர மோட்டார் படகு பயன்படுத்தப்படுகிறது.
உடுமலை, அமராவதி அணையில் ஒப்பந்த அடிப்படையில் மீனவர்கள் பலர் மீன் பிடிக்கின்றனர். கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி உள்ளிட்ட பலவகை மீன்கள் அணையில் கிடைக்கின்றன. அவற்றை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்திடம் விற்கின்றனர். தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவில் உள்ளது. அணையில் 6 கிமீ., சுற்றளவுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர். காற்று வீசும் போதும், துடுப்பு பயன்படுத்தி கரைக்கு வருவதில் மீனவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், மோட்டார் படகில் பரிசல்களை கட்டி, இழுத்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu