உடுமலையில் அதிமுக - திமுகவினர் மோதலால் பரபரப்பு
Tirupur News- உடுமலையில் அதிமுக - திமுக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு அ.தி.மு.க. மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் உடுமலை சாலையில் அரசு பஸ்களை சிறைபிடித்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது தி.மு.க.வை சேர்ந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி மற்றும் தி.மு.க.வினர் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க.- தி.மு.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில், தி.மு.க. பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரனின் மண்டை உடைந்தது.
அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்தோஷ் கவுதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தி.மு.க.வை சேர்ந்த பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தோஷ் கவுதம், கருப்புசாமி ஆகியோர் மீது குமரலிங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலத்தை பொருத்த வரை அதிமுக, திமுக கட்சி நிர்வாகிகள் தரப்பில், கட்சி கொள்கைகளில் வேறுபட்டு இருந்தாலும் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடந்தது இல்லை. உடுமலையில் இப்படி இரு கட்சியினரும் தாக்கிக்கொண்ட சம்பவம், இரண்டு கட்சி நிர்வாகிகளிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் நடந்த சம்பவம் குறித்தும், தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu