உடுமலையில் கோவில் நிலங்கள் மீட்கும் நடவடிக்கை துரிதம்
கோப்பு படம்
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 252 பழமையான கோவில்கள் உள்ளன. அமராவதி, உப்பாறு, பாலாறு படுகை எனப்படும் இப்பகுதிகளில், தொன்மையான கோவில்கள் கட்டப்பட்டு, இக்கோவில்களில், முன்பு தினமும் நித்ய பூஜைகள், ஆண்டு திருவிழாக்கள், சிறப்பு நாட்களில் விேஷச பூஜைகள் நடந்து வந்துள்ளது.
இக்கோவில் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகள் முறையாக நடக்க, ஏராளமான நிலங்கள், மன்னர்கள், பாளையக்காரர்களால், ஒதுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு, கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்டு, கோவிலுக்கு வருவாய் பாதிக்கப்பட்டது. கோவில் பணியாளர்களுக்கு, முன்பு அனுபவிக்கும் உரிமை மட்டும் வழங்கப்பட்ட மானிய பூமிகள் விற்பனை என ஏராளமான கோவில் நிலங்கள் மாயமாகியுள்ளன. இதனால், பெரும்பாலான கோவில் வருவாய் இல்லாமல், நித்ய பூஜைகள் கூட நடக்காமல் சிதிலமடைந்துள்ளன.
பழங்கால கோவில்களை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்துவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை வழியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, கிராம ஆவணங்கள் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கோவில் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் குறித்து ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu