குடிமங்கலத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா; ரூ. 31.45 கோடி கடனுதவி வழங்கல்

குடிமங்கலத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா; ரூ. 31.45 கோடி கடனுதவி வழங்கல்
X

Tirupur News- குடிமங்கலத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில், கடன் திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.

Tirupur News- உடுமலையை அடுத்த குடிமங்கலத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில், 2728 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் ஜெயராணி மஹாலில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 2728 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது,

தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின்மூலம் 35 முழு நேர நியாய விலைக்கடைகளும், 25 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு பணிகளை இந்த கூட்டுறவுத்துறை செயல்படுத்துகிறது.

2023-2024 ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன்கள் 28,845 விவசாயிகளுக்கு ரூ.313.06 கோடியும், நகைக் கடன்கள் 75,079 நபர்களுக்கு ரூ.668கோடியும், மத்திய காலக் கடன்கள் 543 நபர்களுக்கு ரூ.5.25 கோடிக்கும், 156 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.86 லட்சமும், டாப்செட்கோ கடன் 377 நபர்களுக்கு ரூ.2.72கோடியும், டாம்கோ கடன்களாக 120 நபர்களுக்கு ரூ.94 லட்சமும், 1044 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.53.88 கோடியும், வீட்டுக் கடன் 301 நபர்களுக்கு ரூ.15.13கோடியும், சிறுகடன்கள் 1212 நபர்களுக்கு ரூ.4.53 கோடியும் மற்றும் இதர கடன்கள்2372 நபர்களுக்கு ரூ.68.24 கோடி அளவிற்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவுவங்கிகள் மூலம் மொத்தம் 1,10,049 நபர்களுக்கு ரூ.1132.61 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவினை முன்னிட்டு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

மேலும் 2533 பயனாளிகளுக்கு ரூ.2550 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடனுதவிகளும், 91 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.449 லட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்கு ழுக்கடன்களும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், 25 நபர்களுக்கு ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக கடன் உதவிகளும், 24 நபர்களுக்கு ரூ.32.87 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 17 நபர்களுக்கு ரூ.18.99 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 2 நபர்களுக்கு ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் தாட்கோ கடன் உதவிகளும், 4 நபர்களுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் டாப்செட்கோ கடன் உதவிகளும், 7 நபர்களுக்கு ரூ.29.91 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு அடமானக்கடன் உதவிகளும், ஒரு நபருக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடன் உதவிகளும், 1நபருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சரக்கீட்டுக் கடன் உதவிகளும், 4 நபர்களுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை சாராக்கடன் உதவிகளும் என மொத்தம் 2,728 நபர்களுக்கு 31.45 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட சிறந்தகூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசும்,கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சியில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினிக்கு நினைவு பரிசினையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத்தின் சார்பில், மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சத்திற்கான இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையினையும் மற்றும் 4 கூட்டுறவுசங்கங்களுக்கு டிராக்டர்களையும் அமைச்சர் வழங்கினார்.

கூட்டுறவு சங்கங்களின் துணை ப்பதிவாளர்கள் கந்தசாமி, தமிழ்ச்செல்வன், துரைராஜ், முத்துசாமி, தமிழரசு, துணைப்பதிவாளர் (பயிற்சி)காலிதாபானு, கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!