உடுமலை சட்டசபை தொகுதியில் 2.69 லட்சம் வாக்காளர்கள்

உடுமலை சட்டசபை தொகுதியில் 2.69 லட்சம் வாக்காளர்கள்
X

வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் கீதா வெளியிட்டார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் கீதா வெளியிட்டார்.

உடுமலை சட்டசபை தொகுதியில், 2.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் கீதா வெளியிட்டார். உடுமலை வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் இதை பெற்றுக் கொண்டனர். உடுமலை சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 39ஆயிரத்து 458 பெண் வாக்காளர்கள், 23 திருநங்கையர் உட்பட, 2,69,648 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!