முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபர் கைது

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதற்கு திமுகவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்ட நபர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உடுமலை நகர அதிமுகவினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் முகநூலில் பதிவிட்ட திமுகவைச் சேர்ந்த பாலகுமார் என்பவரை கைது செய்தனர்.

Next Story
ai in future agriculture