லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: வெள்ளகோவில் போலீசார் விசாரணை

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: வெள்ளகோவில் போலீசார் விசாரணை
X

பைல் படம்.

புதுப்பை அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது நபர் மீது சரக்கு லாரி மோதிய விபத்து தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் விசாரணை.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன் என்கிற ராஜா (வயது 63). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள சுப்பிரமணியகவுண்டன்வலசில் உள்ள ஒரு தனியார் கிரசரில் ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று புதுப்பை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு லாரி கோதண்டன் என்கிற ராஜா மீது மோதியது.

இதனால் பலத்த அடிபட்ட ராஜாவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story