சென்னை, பெங்களூரு செல்லும் ரயில்கள் போத்தனூர் வழியாக இயக்கம்; கோவை, திருப்பூர், நீலகிரி மக்கள் ஏமாற்றம்
Tirupur News-சென்னை, பெங்களூரு செல்லும் ரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழக-கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்திருப்பதால் கேரளாவுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் கோவை வழியாகவே இயக்கப்படுகின்றன.வடகோவை-இருகூர் இடையே இருவழிப்பாதை இல்லையென்பதை காரணம் காட்டி கேரளா செல்லும் 13 ரயில்கள், போத்தனூர் வழியே கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்தன. அதாவது 26 ரயில் சேவைகளில் கோவை புறக்கணிக்கப்பட்டது.
இதன் காரணமாக, 1996-1997 ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, 60 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் பாதை அமைக்கப்பட்டது.சேலம் கோட்டம் தொடங்கிய பின் வேகமெடுத்து 2012ல் முடிவடைந்தது. அதன்பின்னும், கேரளா செல்லும் ரயில்கள், கோவை சந்திப்புக்கு திருப்பப்படவில்லை.
இந்த 13 ரயில்களை திருப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ரயில்வே போராட்டக்குழு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. அதன் விளைவாக, 13 ரயில்களில் முக்கியமான 4 ரயில்கள் மட்டும் திருப்பப்பட்டன. மற்ற ரயில்களும் படிப்படியாக திருப்பப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் அந்த ரயில்கள் திருப்பப்படவே இல்லை.
இந்நிலையில் கோவையை புறக்கணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இப்போது 15 ரயில்கள், கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனூர் வழியே கேரளாவுக்கு செல்கின்றன.அதாவது7 ரயில்கள் எதிரெதிர் திசையிலான இரு வழியான சேவைகளிலும், ஒரு ரயில் ஒரு வழிச் சேவையிலுமாக 15 ரயில்கள் கோவையை புறக்கணித்து செல்கின்றன.
இந்த புறக்கணிப்பு பட்டியலில், பீஹார் மாநிலம் பரவ்னிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலும், சபரிமலை பக்தர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலும் , கோவைக்குள் வராமல் போத்தனூர் வழியே செல்கின்றன.
சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு டிசம்பர் 31 வரை 7 சேவைகளும், கோட்டயத்திலிருந்து சேவைகளும், கோட்டயத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ( 2024 ஜனவரி 1 வரை) 7 சேவைகளுடன் இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரயிலும், கோவைக்கு வராமல் போத்தனூர் வழியே செல்கிறது. இந்த ரயில், கோவை சந்திப்புக்கு வந்தால் பல ஆயிரம் அய்யப்ப பக்தர்கள் பலனடைவர்.
கேரளாவிலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் பாதிப்பில்லை.அரிதாக பயணிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் போத்தனூரில் ஏறி இறங்கிக்கொள்வர்.
ஆனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.ஏனெனில் இந்த நகரங்களுக்குதான் கோவையில் இருந்து தினமும் பல ஆயிரம் மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர். எனவே கேரளாவிலிருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ரயில்களை மட்டுமாவது கோவை சந்திப்பு வழியாக இயக்க வேண்டும் என திருப்பூர், கோவை தொழில் அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu