திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
X

Tirupur News - டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு புதன்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு புதன்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் (எஃப்.எல்.1), அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு உரிமம் பெற மதுபானக் கூடங்கள் (எஃப்.எல்.2., எஃப்.எல்.3) ஆகியவை புதன்கிழமை (மே 1) முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதால், பிளாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்க சிலர் முற்படுவதால் அதுகுறித்து கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே வேளையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு இன்றே கூடுதலாக நாளைக்கும் சேர்த்து, மதுபான பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள குடிமகன்களும் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!