திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் நாளை நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் நாளை  நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
X
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் நுகர்வோர் வரும் 17ம் தேதி ( நாளை) குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மின் பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட, மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நவம்பர் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு, திருப்பூர் குமார் நகர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, மின்நுகர்வோர் இதில் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!