அவினாசி, தாராபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவினாசி, தாராபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் தாராபுரம் மின்பகிர்மான வட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின், அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வௌியிட்டுள்ள தகவலில், அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் வரும் 8ம் தேதி (நாளை) காலை 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 8ம் தேதி, காலை 11:00 மணிக்கு, தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தீர்வு பெறலாம் என்று, தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!