திருப்பூரில் சிவன், பெருமாள் கோவில்களில் உண்டியல் காணிக்கை ரூ. 37 லட்சம்

திருப்பூரில் சிவன், பெருமாள் கோவில்களில் உண்டியல் காணிக்கை ரூ. 37 லட்சம்
X

Tirupur News- திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

Tirupur News- திருப்பூரில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள், அவிநாசி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 37 லட்சம் கிடைத்துள்ளது.

அவிநாசி

Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் 101 கிராம் தங்கம், 53 கிராம் வெள்ளியுடன் ரூ.25 லட்சத்து 75 ஆயிரத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், விநாயகா், காசிக்கிணறு, கோ சாலை, திருப்பணி உண்டியல், பெருமாள் கோயில், ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், பக்தா்கள் ரூ.25 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம், 101 கிராம் தங்கம், 53.100 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருப்பூர்

திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோயில்களின் உண்டியல்களில் ரூ.11.74 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கரூா் தான்தோன்றிமலை கோயில் உதவி ஆணையா் நந்தகுமாா், கோயில் செயல் அலுவலா் சரவணபவன், ஆய்வாளா் கணபதி ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 80 போ் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் ரூ.5,44, 504 ரொக்கம், 23 கிராம் தங்கம்,101 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

அதேபோல, வீரராகவப் பெருமாள் கோயிலில் ரூ.6, 29,804 ரொக்கம், 42 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இந்த 2 கோயில்களிலும் ரூ.11.74 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 209 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் செயல் அலுவலா் சரவணபவன் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story