திருப்பூர் வழியாக ‘பயணிக்கும்’ வந்தே பாரத் ரயில்; பயணிகள் ‘குஷி’

tirupur News, tirupur News today- சென்னை - கோவை வழியாக இயக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- சென்னையில் இருந்து கோவை வரை வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த வகையில், காலை 5.40 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், காலை 8 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை சென்றடைந்தது.
அதன் பின், காலை 9.15 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சேலம் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. அடுத்ததாக சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத், ஈரோடு, திருப்பூர் மார்க்கமாக கோவை சென்றது. பின்னர் மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து 12.40 மணி அளவில் புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனை .வந்து அடைந்தது. சோதனை ஓட்டத்தின் போது 180 கி மீ வரை வந்தே பாரத் ரயிலின் வேகம் இருந்தது.
வந்தே பாரத் சிறப்பம்சங்கள்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கு. தரமான குஷன் இருக்கைகள், 360 டிகிரி சுழலக்கூடிய வகையில் இருக்கைகள், சிசிடிவி கேமரா போன்ற வசதிகள் உள்ளன. இதில் 1128 பயணிகள் அதிக பட்சமாக செல்ல முடியும். மேலும், ரயிலை ஓட்டுபவரை நேரடியாக தொடர்பு கொள்ளும் மைக் வசதி, நவீன கழிவறை, ஏசி வசதி, வைஃபை பயன்பாடு, ஜிபிஎஸ் ட்ராக்க்கிங், எல். சி. டி திரைகள், தனித்தனியான விளக்குகள் போன்ற வசதிகள் இருக்கின்றன. இந்த வந்தே பாரத் ரயிலை மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பூரில்...
கோவை - சென்னை இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் எஸ்பிரஸ் காலை 6. 35 மணி அளவில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை சென்றடையும். இரண்டு நிமிட இடைவெளியில் 6. 37 மணிக்கு மீண்டும் புறப்பட்டு, ஈரோட்டுக்கு காலை 7. 12 மணிக்கு சென்றடையும். மீண்டும் 3 நிமிட இடைவெளியில், ஈரோட்டில் இருந்து புறப்பட்டு 7.58 மணி அளவில் சேலம் ரயில்வே ஸ்டேஷனை வந்து அடையும். சேலத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை காலை 11.50 மணிக்கு வந்தடையும்.
மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, சேலம் ரயில்வே ஸ்டேஷனைமாலை 5.48 மணிக்கும், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை மாலை 6.32 மணிக்கும் சென்றடையும். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை 7.13 மணிக்கு வந்து சேரும் வந்தே பாரத், கோவையை இரவு 8.15 மணிக்கு அடையும். புதன் கிழமையை தவிர, வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu