திருப்பூர் மாவட்டம்; ஜமாபந்தி வரும் 23-ம் தேதி முதல் துவக்கம்
திருப்பூர் மாவட்டத்தில், வரும் 23ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்குகிறது. (கோப்பு படம்)
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி வருகிற 23-ம் தேதி முதல் தொடங்குகிறது. பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கலெக்டர் வினீத் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23, 24-ம் தேதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையிலும், ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில், வருகிற 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தலைமையிலும், அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை உதவி ஆணையாளர் (கலால்) தலைமையிலும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 1-ம் தேதி வரையில் தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் 23-ம் தேதி, 24-ம் தேதிகளில் உடுமலை ஆர்.டி.ஓ. தலைமையிலும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமையன்று ஜமாபந்தி நடைபெறாது. கிராம கணக்குகள், புறம்போக்கு நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அபராதம் முழுமையாக வசூலிக்கப்பட்ட சான்று ஆகியவற்றை தாசில்தார்கள் சம்பந்தப்பட்ட ஜமாபந்தி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu