திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு. 

Tirupur News. Tirupur News Today- தாராபுரத்தில், மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

தாராபுரத்தில் இரண்டு திருடர்கள் கைது

Tirupur News. Tirupur News Today- தாராபுரத்தில் கடந்த 25-ம் தேதி அரசு பஸ் கண்டக்டர் தங்கவேல் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5.5 பவுன் தங்க நகை திருட்டு போனது. 31-ம் தேதி அசோக்நகர் பகுதியில் கூட்டுறவு வங்கி அதிகாரி செல்லமுத்து வீட்டில் 5பவுன் நகை, ரூ. 3லட்சம், அரை கிலோ வெள்ளி திருட்டுப்போனது. இம்மாதத்தில், கடந்த 5-ம் தேதி கணபதி நகரில் முன்னாள் அரசு ஊழியர் ஜீவானந்தம் வீட்டில் 8பவுன் நகை திருட்டுப்போனது. இந்த மூன்று திருட்டு சம்பவங்கள் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தாராபுரம் போலீஸ் டிஎஸ்பி தனராசு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தாராபுரம்-திருப்பூர் சாலையில் ஐ.ஐ.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது 35) மற்றொருவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (25) என தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10பவுன் நகை மற்றும் ரூ.90ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமியை ஏமாற்றியவர் ‘போக்சோ’வில் கைது

பல்லடம் அருகே, மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய ஆண் ஒருவர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி, அந்த ஆணுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வந்த போது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து அந்நபரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வடமாநில தொழிலாளி தற்கொலை

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவராஜ்(வயது 18). இவர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சுவராஜ் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடத்தில் மூதாட்டி பலி

பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 72). இவர் அவரது மகள் கலாமணியுடன் வசித்து வந்தார். வேலைக்குச் சென்ற கலாமணி வேலை முடிந்து வீடு திரும்பிய போது, அவரது தாயார் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனால் அலறி துடித்த அவர், அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, கலாமணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மூதாட்டி - தங்கை மகளுடன் தற்கொலை

காங்கயம் அருகே ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த மூதாட்டி வறுமையின் கொடுமையால் தங்கையின் மகளுடன் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீரமுத்துவும், அவருடைய மகனும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர். இதனால் லட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் லட்சுமியின் தங்கையும், தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளான கலாமணியை லட்சுமியின் பராமரிப்பில் விட்டிருந்தார்.

இதனால் லட்சுமியும், கலாமணியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமிக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வறுமை அவரை துரத்தியது. வருமானத்திற்கு போதிய வழியில்லாததால் அவரால் மன நலம் பாதிக்கப்பட்ட கலாமணியையும் சேர்த்து பார்த்துக்கொள்ள இயலவில்லை. இதனால் கலாமணியை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட முயற்சி செய்து வந்தார். இந்த சூழலில் வேலைக்கும் போகமுடியாமல் வறுமையில் வாடி வந்த லட்சுமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் காங்கயம் அருகே மடவிளாகம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் அடுத்தடுத்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் லட்சுமியும், கலாமணியும் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து 2 பேரின் சடலங்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வறுமையின் கொடுமையால் இவர்கள் 2 பேரும் வீட்டின் அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு