திருப்பூர் மாவட்டம்; 40 மாதங்களில் நடந்த விபத்துகளில், 2,710 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம்;  40 மாதங்களில் நடந்த விபத்துகளில், 2,710 பேர் உயிரிழப்பு

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், 40 மாதங்களில் நடந்த விபத்துகளில், 2,710 பேர் உயிரிழப்பு (கோப்பு படம்)

Tirupur News Today Live- திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2020 முதல், இதுவரை 3 ஆண்டுகள், 4 மாதங்களில் மொத்தம் 2,710 பேர், சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

Tirupur News Today Live- திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2020- 21 -22 ஆகிய 3 ஆண்டுகளில், 2454 பேரும், கடந்த 4 மாதங்களில் 256 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். மொத்தம், 40 மாதங்களில், 2710 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக, தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருப்பூர், தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம். இங்கு பின்னலாடை தொழில், கறிக்கோழி வளர்ப்பு, விசைத்தறி, பாத்திர உற்பத்தி தொழில், எண்ணெய், அரிசி ஆலைகள், விவசாயம் நடக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், வெளிமாநில மக்களும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதன்காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் என்பது குறைவாகவே உள்ளது. விதிமீறும் வாகன ஓட்டிகளால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கரூர்-திருச்சி சாலை, கோவை-சேலம் சாலைகளில் விபத்துகள் அதிகமாக நடக்கிறது.

மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 600 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 774 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 306 பேர் காயமடைந்துள்ளனர். இதுபோல் 2021-ம் ஆண்டு நடந்த 2 ஆயிரத்து 703 விபத்துகளில் 795 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 413 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு 3 ஆயிரத்து 143 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 885 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 961 பேர் காயமடைந்துள்ளனர்.

நடப்பாண்டில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, 4 மாதங்களில் இதுவரை ஆயிரத்து 90 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 256 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்து 243 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய் கூறும்போது, 'விபத்துகளை குறைக்கும் வகையில் ஹாட்ஸ்பாட் விபத்து நடக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு விபத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராத நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.

திருப்பூரை பொருத்தவரை, வாகனங்களின் தேவை மிக இன்றியமையாததாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக இயக்கப்படும் முக்கிய நகரங்களில், திருப்பூரும் ஒன்றாக உள்ளது. தொழில் நகரம் என்பதால், தினமும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் திருப்பூருக்குள் வந்து செல்கின்றன. புறநகர் பகுதிகளும் பெருமளவில் விரிவடைந்துள்ள நிலையில், மக்களும் தினமும் பல்வேறு காரணங்களுக்காக நகருக்குள் வந்து செல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ என அழைக்கப்படும் திருப்பூரில், போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு இல்லை; விபத்துகளும் குறையவில்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கு தொலைநோக்கு திட்டங்களுடன், சாலை வசதிகளை மேம்படுத்துவது, நகரப் பகுதிக்குள், ‘பீக் ஹவர்’ நேரங்களில், கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story