திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்

tirupur News, tirupur News today- திருப்பூரில் ரேஷன் கடையில் 5 கிலோ காஸ் சிலிண்டர் வினியோகம் துவங்கியது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இரு பிரிவுகளிலும், சிலிண்டர் இணைப்பு பெற கேஸ் ஏஜென்சிகளில், ஆதார் எண் ,முகவரி சான்று ஆகிய ஆவணங்களை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனிடையே திருப்பூர், சென்னை ,கோவை போன்ற பெரிய நகரங்களுக்கு வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர். அதே போல் வெளிமாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களும், கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நீடித்தது. வீடுகள், வணிக பயன்பாடுகள் தவிர்த்து, குறைந்த கிலோ எண்ணிக்கை அடிப்படையில், சிலிண்டர்கள் வழங்கப்பட்டால், தங்களின் பயன்பாட்டுக்கு உதவும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது.
மேலும், வாடகை வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்கள் விறகு அடுப்பு, மண்ணெ்ணெய் அடுப்பு, கேஸ் ஸ்டவ்வில் சமைக்கவோ வீட்டு உரிமையாளர்கள் பலரும் அனுமதிப்பதில்லை. எனவே, மூன்று வேளையும் ஓட்டல்களில் சாப்பிடும் நெருக்கடிக்கு பலரும் தள்ளப்படுகின்றனர். இதனால், அதிக செலவு மட்டுமின்றி, தரமான உணவும், போதிய உணவும் பலருக்கு கிடைப்பதில்லை.
இதையடுத்து, இதுபோன்ற தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளின் வசதிக்காக இந்தியன் ஆயிலுடன் இணைந்து, மினி சிலிண்டர் ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. சென்னை உள்ளிட்ட சில நகரங்களில், இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அதிகளவில் மக்கள் பயனடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில், முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு நியாய விலை கடையில் இந்தத் திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியு ள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்த எடை கொண்ட சிலிண்டர்கள் தேவைப்படும் வியாபாரிகள், தொழிலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை அணுகி, அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தி, சிலிண்டர்களை பெற்று பயனடையலாம் என்று, அதிகாரிகள் கூறினர். திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல, சிறு வியாபாரிகளும் அதிகம் என்பதால், இந்த திட்டம் அவர்களுக்கு அதிக பயனளிப்பதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம் . தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இத்திட்டமானது இக்கடையில் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளதாகவும் , இதன் வரவேற்பு பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu