/* */

திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 880 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட் வழங்கல்

tirupur News, tirupur News today- மத்திய, மாநில வரித்துறைகள் மூலம் பனியன் ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை மொத்தம் 880 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 880 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட் வழங்கல்
X

tirupur News, tirupur News today- திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்களுக்கு, ரூ. 880 கோடி ஜிஎஸ்டி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)  

tirupur News, tirupur News today- திருப்பூரில் தயாரிக்கப்படும் பனியன் ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ரகங்கள் திருப்பூரிலிருந்து உலக சந்தைக்கு அனுப்பப்படுகிறது. பனியன் ரகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய பின் ஏற்றுமதியாளர்கள் உரிய ஆவணங்களுடன் மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் வணிக வரித்துறையில் ரீபண்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரீபண்ட் தொகை விடுவிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு (2022 - 23) நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகம் மூலம் 360 கோடி ரூபாய் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. 16 சரகங்களை உள்ளடக்கிய திருப்பூரின் இரண்டு வணிக வரி மண்டலங்கள் மூலம் 520 கோடி ரூபாய் என மத்திய, மாநில வரித்துறைகள் மூலம் பனியன் ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை மொத்தம் 880 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு பரிசீலித்து உடனடியாக ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகை விடுவிக்கிறோம். இக்கட்டான சூழல்களில் உரிய காலத்தில் ரீபண்ட் கிடைப்பது, பனியன் ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதன தேவைக்கு பக்கபலமாக உள்ளது, என்றனர்.

ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலகும் ஏற்றுமதியாளர் சங்கம்

tirupur News, tirupur News today- திருப்பூர் பனியன் தொழில் துறையினர் தங்களுக்குள் வர்த்தகம் சார்ந்து ஏற்படும் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணும் வகையில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இதில் பனியன் உற்பத்தி ,ஜாப்ஒர்க் சார்ந்த 20 சங்கங்கள் உறுப்பினராக உள்ளன. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஆர்பிட்ரேஷன் கவுன்சில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி கவுன்சில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


பனியன் உற்பத்தி நிறுவனம் ( கோப்பு படம்)

ஆடை உற்பத்தியாளர்கள் - ஜாப்ஒர்க் நிறுவனத்திரிடையே ஏற்படும் நிதி சார் பிரச்னைகள், ஏற்றுமதியாளர் - வெளிநாட்டு வர்த்தகரிடையே ஏற்படும் நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு, இந்த கவுன்சில் சுமூக தீர்வு காண்கிறது.சைமா மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள், ஆர்பிட்ரேஷனில் பிரதான உற்பத்தியாளர் சங்கங்களாக அங்கம்வகித்து வருகின்றன.

இந்நிலையில், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், ஆர்பிட்ரேஷன் கவுன்சில் செயலாளர் ராமசாமிக்கு அனுப்பிய கடிதம்;

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க 262வது செயற்குழு கூட்டம் கடந்த மார்ச் 6ல் கூடியது. இதில் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் தொடரலாமா என விவாதிக்கப்பட்டது. ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் இருந்து விலகலாம் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆர்பிட்ரேஷன் கவுன்சிலின் ஆயுட்கால உறுப்பினர் என்கிற நிலையை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வாபஸ் பெறுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆர்பிட்ரேஷன் கவுன்சில், விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

Updated On: 20 March 2023 6:54 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்