மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டி; வரும் 22,23ல் திருப்பூரில் வீரர்கள் தேர்வு

மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டி; வரும் 22,23ல் திருப்பூரில் வீரர்கள் தேர்வு
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் 22, 23 ம் தேதிகளில், மாநில கபடி போட்டியில் விளையாடுவதற்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான திருப்பூா் மாவட்ட ஆடவா், மகளிா் கபடி அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு, வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Tirupur News. Tirupur News Today- மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான திருப்பூா் மாவட்ட ஆடவா், மகளிா் கபடி அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு, ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை;

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில அளவிலான ஆடவா் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வரும் மே 5-ம் தேதி முதல் மே 7ம் தேதி வரையில் நடைபெறுகின்றன.அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகளிருக்கான மாநில அளவிலான கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் மே 12-ம் தேதி முதல் மே 14 ம் தேதி வரையில் நடைபெறுகின்றன.

இப்போட்டிகளில் திருப்பூா் மாவட்டத்தின் சாா்பில் பங்கேற்பதற்கான ஆடவா், மகளிா் அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வானது ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. திருவள்ளுவா் நற்பணி மன்றம் சாா்பில் நடத்தப்படும் மாநில தொடா் கபடிப் போட்டியில் இருந்து வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இப்போட்டியில் பங்கேற்க ஆடவா் 85 கிலோவுக்கு மிகாமலும், மகளிா் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. இதில், தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பயிற்சி முகாம் நடத்தி மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

மேலும், மதுரையில் ஹரியாணா ஸ்டீல்ஸ் புரோ கபடி போட்டிக்கான ஆள்கள் தோ்வு ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் 5 சிறந்த விளையாட்டு வீா்கள் தோ்வு செய்யப்பட்டு மதுரைக்கு அனுப்பி வைக்க ப்பட உள்ளனா். இந்த புரோ கபடிப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு சிறுவா்களுக்கு மே 25-ம் தேதியன்று 16 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்க வேண்டும். பள்ளிச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டையை எடுத்துவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருப்பூரில் மாவட்ட பகுதிகளில் உள்ள கபடி வீரர்கள், வீராங்கனைகள் வரும் 22, 23 ம் தேதிகளில் நடக்கும் நேரடி தேர்வில் பங்கேற்க வருமாறு, அழைப்பு விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா