Tirupur News. Tirupur News Today- பல்லடத்தில் போலீஸ் விசாரணை என கடத்தப்பட்ட பெண் மீட்பு; 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

Tirupur News. Tirupur News Today- பல்லடத்தில் போலீஸ் விசாரணை என கடத்தப்பட்ட பெண் மீட்பு; 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
X

Tirupur News. Tirupur News Today- பல்லடத்தில், கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்ட நிலையில், கடத்திய வாலிபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tirupur News. Tirupur News Today- பல்லடத்தில், பைக்கில் காதலருடன் சென்ற பெண்ணை, போலீஸ் என கூறிக் கடத்திய வாலிபரை பிடிக்க, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tirupur News. Tirupur News Today - ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் ஊட்டிக்குச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் இருவரும் புறப்பட்டனர். மதுரை , ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக பல்லடம் நோக்கி, அவர்கள் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே செல்லும்போது திடீரென அவர்களது பைக்கை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர்களது பைக்கை வழிமறித்து நிறுத்தி, ‘இருவரும் எங்கு செல்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது. உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

‘நாங்கள் ஊட்டி செல்கிறோம், இருவரும் காதலர்கள்,’ என்று அவர்கள் கூறிய நிலையில், ‘உங்களை தனித்தனியே விசாரிக்க வேண்டும்,’ என்று கூறிய அந்த வாலிபர், ரோபாஸ்டனை பைக்கில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அழைத்து சென்று பல்லடம் - திருச்சி சாலையில் உள்ள மாதப்பூர் கருப்பசாமி கோவில் அருகே நிற்க வைத்துவிட்டு, காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த ரோபாஸ்டன், உடனே காதலி இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து காதலி கடத்தப்பட்டது குறித்து, பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் சோதனைச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளையும் பார்வையிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு பல்லடதிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்தப் பெண் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இளம்பெண்ணை போலீஸ் எனக் கூறி, கடத்திய வாலிபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் , இளம்பெண்ணை கடத்திய வாலிபர் யார், எதற்காக கடத்தி சென்றார் என்று தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story