திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமிய மக்கள் உற்சாகம்

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்; இஸ்லாமிய மக்கள் உற்சாகம்
X

Tirupur News. Tirupur News Today - திருப்பூரில், பெரிய கடை வீதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள்.

Tirupur News. Tirupur News Today-திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tirupur News. Tirupur News Today- கடந்த மார்ச் 24ல் துவங்கிய நோன்பு காலம் முடிந்த நிலையில், பிறை தென்பட்டதால், இன்று(ஏப்ரல் 22) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மேலும், இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தியும், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.

இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருந்த பிறகு, உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

திருப்பூரில், இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ராஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் , பல்லடம் ,உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமிய மக்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர். திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது . இதில் ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தொழுகைக்கு பின் அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் .

இதைப்போல் பெரிய தோட்டம் கே .ஜி. கார்டன் , செரங்காடு, கோம்பை தோட்டம் உள்ளிட்ட 27 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். மேலும், தங்களது நண்பர்கள்,உறவினர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!