மதுக்கரையில் ரயில் பாதை பணி; திருப்பூர் வழியாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுக்கரையில் ரயில் பாதை பணி; திருப்பூர் வழியாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
X

Tirupur News. Tirupur News Today- ரயில் பயணிகள் கவனத்துக்கு ( கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- மதுக்கரையில் ரயில் பாதையை மேம்படுத்தும் பணி நடப்பதால், திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரயில்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tirupur News. Tirupur News Today- மதுக்கரை பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், திருப்பூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை - கேரளா மாநிலம் பாலக்காடு டவுன் மாலை 6மணி பயணிகள் ரயில் 12, 13, 15, 16, 27-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. கேரளா மாநிலம் சொரனூர் - கோவை காலை 8:20 மணி சிறப்பு ரயில் 17-ம் தேதி வரையில் பாலக்காடு டவுன் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை - சொரனூர் மாலை 4:30 மணி சிறப்பு ரயில் 17ம் தேதி வரையில் பாலக்காட்டில் இருந்து மாலை 5:55 மணிக்கு இயக்கப்படும்.

மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 9 மணி விரைவு ரெயில் 17-ம் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு டவுன் - ஈரோடு மதியம் 2:40 மணி பயணிகள் ரயில் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் கோவையில் இருந்து மாலை 4:28 மணிக்கு இயக்கப்படும். ஈரோடு - பாலக்காடு டவுன் காலை 7:15 மணி பயணிகள் ரயில் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் கோவை வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி - பாலக்காடு டவுன் மதியம்1மணி ரயில், 17-ம் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.சொரனூர் - கோவை மாலை 3:10 மணி பயணிகள் ரயில் 12, 13, 15, 16, 17- ம் தேதிகளில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். .மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 11:05 மணி இன்டர்சிட்டி விரைவு ரயில் 17 -ம் தேதி வரையில், பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ரயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ் ரயில் இன்று இயக்கப்படுகிறது. கோவை - ஜம்முதாவி(06903) ரயில் இன்று காலை, 7:45 மணிக்கு வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது. நாளை மறுநாள் 13-ம் தேதி இரவு, 1:30 மணிக்கு ஜம்முதாவி சென்றடையும்.ரயிலில் தலா ஒரு முதல் வகுப்பு ஏ.சி., மற்றும் ஏ.சி., இரண்டடுக்கு, 8ஏ.சி., மூன்றடுக்கு, ஒரு தூங்கும் வசதி உள்ளிட்ட 14 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஒயிட்பீல்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராலா, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜான்சி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்லும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai and business intelligence