அதிக மதிப்பெண் பெற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லட்சுமி ஹயரிக்ரீவர் யாக பூஜை

அதிக மதிப்பெண் பெற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லட்சுமி ஹயரிக்ரீவர் யாக பூஜை
X

tirupur News, tirupur News today-திருப்பூர் வீரராகவபெருமாள் கோவிலில் பிளஸ்-2 மாணவ-மாணவிளுக்கு லட்சுமி ஹயரிக்ரீவர் யாக பூஜை நடைபெற்றது.

tirupur News, tirupur News today-திருப்பூர் வீரராகவபெருமாள் கோவிலில் பிளஸ்-2 மாணவ-மாணவிளுக்கு லட்சுமி ஹயரிக்ரீவர் யாக பூஜை நடைபெற்றது.

Puja as Lakshmi High Greever for school students to get high marks- திருப்பூர் வீரராகவபெருமாள் கோவிலில், பிளஸ்-2 மாணவ-மாணவிளுக்கு லட்சுமி ஹயரிக்ரீவர் யாக பூஜை நடைபெற்றது.

லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை திருப்பூர் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நல்ல நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பூஜை கடந்த 26-ம் தேதி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தொடங்கியது. இதில் பிளஸ்-2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2-வது வாரமாக நேற்று நடைபெற்ற இந்த யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது. இதில் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை துணைத் தலைவர் ‘கிளாசிக் போலோ’ சிவராம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மனிதனின் கவலை, புல்லை விட வேகமாக வளர்வது மனிதனின் கவலையாகும். கவலைப்படும்போது ஒரு கவலை 4 ஆகி, நான்கு 40 ஆகி, நாற்பது 400 ஆகி, நானூறு 4000 ஆகி மனிதனை அழித்து விடும். இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் தியாகமும், கல்வியின் முக்கியத்துவமும் ஆகும். ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் அதை பிடித்துக் கொண்டு நேரத்தை வீணாக்காமல், தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுத வேண்டும். எனவே, எந்த கவலையும் இல்லாமல் மாணவர்கள் தைரியமாக தேர்வை எழுத வேண்டும் என்று அவர் கூறினார்.

ஹயக்ரீவர் சுலோக அட்டை இந்த பூஜையையொட்டி மாணவ-மாணவிகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் சுலோக அட்டை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை கவுரவ ஆலோசகர் முத்துநடராஜன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்ராவ் உள்பட அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை, படித்த பாடங்களை மறந்து விடுவதுதான். தேர்வு எழுதும் அறையில், படித்தது மறந்து விடுவதால், மாணவ, மாணவியர் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். பதட்டத்தில் தெரிந்த வினாக்களுக்கும், விடையளிக்க மறந்து விடுகின்றனர். இதனால், நல்ல மதிப்பெண் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். எனவே, அவர்களது நினைவாற்றல் பெருகும் வகையில், இந்த பூஜை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ, மாணவியர் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும், தங்களது பிள்ளைகளின் கல்வி நலனை வேண்டி, இந்த லட்சுமி ஹயரிக்ரீவர் யாக பூஜையில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare technology