பல்லடம், குன்னத்தூரில் நாளை மின்தடை

பல்லடம், குன்னத்தூரில் நாளை மின்தடை
X

Tirupur News. Tirupur News Today- பல்லடம், குன்னத்தூரில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. (மாதிரி படங்கள்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மற்றும் குன்னத்தூரில், நாளை ( 18ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News. Tirupur News Today- பல்லடத்தை அடுத்துள்ள பனப்பாளையம் - துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

இதுகுறித்து, பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

பல்லடம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பனப்பாளையம், மாதப்பூர், கணபதிபாளையம், குங்குமம் பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குன்னத்தூர்

குன்னத்தூர் பகுதியில், துணை மின் நிலையங்களில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் குன்னத்தூர், ஆதியூர், தளபதி, கவுதம்பாளையம், கருமஞ்செறை, நவக்காடு, வெள்ளரவெளி, சின்னையம்பாளையம், வேலம்பாளையம், கணபதிபாளையம், செட்டி ஊட்டை, குறிச்சி, நல்லி கவுண்டம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில், நாளை ( 18-ம்தேதி) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என, பெருந்துறை மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!