ஹால் மார்க் நகைகளை விற்க ஓராண்டு அவகாசம்; வியாபாரிகள் கோரிக்கை

tirupur News, tirupur News today- பழைய ஹால்மார்க் நகைகளை விற்க அவகாசம் கேட்கும் நகை வியாபாரிகள் (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யும் தங்க ஆபரணங்களில் முக்கோண வடிவிலான ஹால்மார்க் முத்திரையுடன், 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவை இல்லாத தங்க ஆபரணங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளது.
இந்த திடீர் அறிவிப்பு, நகை விற்பனையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இம்மாத இறுதிக்குள் பழைய நகைகளை விற்பனை செய்ய முடியாது என்பதால், ஓராண்டு காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என, அவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஹால் மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது.இதில் 3 இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாலும், 3 இலக்கங்கள் எண் வடிவிலும் இருக்கும். இந்த அடையாள எண் முன்பு நான்கு இலக்கங்களில் வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல் 6 இலக்க அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு ள்ளது. பழைய நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை, அடுத்த மாதம் ஏப்ரல் முதல் விற்க முடியாது.
இது குறித்து தர நிர்ணயத்தினர் கூறுகையில், வரும் ஏப்ரல் முதல் தங்க ஆபரணங்களில் 6 இலக்கங்களை கொண்ட தனித்துவ அடையாள எண் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நகைகள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்த ப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்தின் மீதும், விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழைய நடைமுறை யில் ஹால்மார்க் முத்திரை மற்றும் 4 இலக்க எண்ணுடன் தங்க ஆபரணங்கள் விற்பனையை முடிக்க கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி நிறைவடைகிறது, என்றனர்.
நகை வியாபாரிகள் கூறுகையில், பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்பனை செய்ய ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே வேளையில், பழைய ஹால்மார்க் பதித்து விற்பனை செய்த நகைகளின் தரத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிவிக்க வேண்டும், என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu