திருப்பூரில் குருபெயர்ச்சி விழா; கோவில்களில் சிறப்பு பூஜை

திருப்பூரில் குருபெயர்ச்சி விழா; கோவில்களில் சிறப்பு பூஜை
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், கோவில் குருபெயர்ச்சி விழா சிறப்பு பூஜைகள் நடந்தன. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tirupur News. Tirupur News Today-மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.இதனையொட்டி திருப்பூர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குரு பெயர்ச்சி அடையும் நேரம் வரை குருபகவானுக்கு எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம்,மஞ்சள்,பன்னீர், தண்ணீர் ஆகிய பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இரவு 11.21 மணிக்கு குரு பெயர்ச்சி அடைந்த பிறகு வண்ண வண்ண மலர்களாலும் , ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் குருபகவானை வழிபட்டனர். அதன் பின் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாலை 2 மணி வரை பக்தர்களுக்காக கோவில்களின் நடை திறந்திருந்தன.


பல்லடம்: பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் உள்ள நவகிரக நாயகா் கோளறுபதி சிவன் ஆலயத்தில் சோபகிருது வருட குருப்பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா மகாயாகம், 1008 தீா்த்த கலச அபிஷேகம் ஆகியன நடைபெற்றன.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாக வேள்வி மற்றும் பூஜைகளை நடத்தி வைத்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். யாக சாலை வேள்வியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட கங்கா தீா்த்த கலசத்தை பக்தா்கள் பெற்று நவகிரக கோட்டையினுள் அமைந்துள்ள தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானின் பொற்பாதங்களுக்கு தாங்களே தீா்த்த அபிஷேகம் செய்து வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பொங்கலூா் வட்டம், அலகுமலையில் உள்ள முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆறுபடை முருகனுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோவிலில் மூலவராக அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு கிருத்திகையை ஒட்டி 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக அா்த்தமண்டபம் முழுவதும் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இதன் பின்னா் அலகுமலை கிருத்திகைக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அட்சயத்திருதியை முன்னிட்டு எலுமிச்சை கனி மற்றும் ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!