கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள்; பெருமாநல்லூரில் எஸ்.பி நேரில் ஆய்வு

tirupur News, tirupur News today - திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் கொண்டத்து காளியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். (கோப்பு படம்).
tirupur News, tirupur News todayதிருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வருகிற 4-ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிய உள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தடுப்பு கட்டைகள், 30-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, தங்கும் வசதி, சிறப்பு பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீ்ஸ் எஸ்.பி ஷசாங் சாய் கோவிலுக்கு வருகை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவிநாசி போலீஸ் டிஎஸ்பி பவுல்ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பக்தர்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், 4 கண்காணிப்பு கோபுரம், 5 பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் அவிநாசி தீயணைப்புத்துறையினரும் ஈடுபட உள்ளனர்.
ஆய்வின் போது பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
களை கட்டும் திருவிழா
திருப்பூர், குன்னத்தூர், நம்பியூர், அவிநாசி என சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள், கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், பங்கேற்று பூ மிதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்கள் வீடுகள் உள்ள பகுதிகளில் இருந்து, கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வழிநெடுக நடந்தபடி சென்று, கோவிலை அடைவது வழக்கம். அவ்வாறு நடந்து செல்பவர்களை வீரமக்கள் என அழைக்கின்றனர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து,கையில் வேப்பிலை ஏந்தி அம்மனை வழிபட்டபடி செல்வர். வீரமக்கள் வரும் பாதையில், தண்ணீரை கொட்டி அவர்களின் பாத சூட்டை குறைப்பதோடு, அவர்களுக்கு தலையில்,நல்லெண்ணெய் ஊற்றி வழிபடுவது இப்பகுதிகளில் வழக்கமாக உள்ளது.
குண்டம் திருவிழா நாளில் இரவு முழுவதும் பக்தர்களின் வருகை, குண்டம் தயாராகுதல், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு பொழுதுபோக்குகள், கடை வீதிகளில் விற்பனை என, கோவில் உள்ள பகுதி முழுவதும் களை கட்டிய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu