திருப்பூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

திருப்பூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் நாளை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. (மாதிரி படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில், வேலை தேடுபவர்கள், பங்கேற்று பயனடைய அழைப்பு விடப்பட்டுள்ளது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 30-க்கும்மேற்பட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களைதேர்வு செய்ய உள்ளனர்.

படித்துவிட்டு, வேலைநாடுபவர்கள் தங்கள்வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்துகொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவுசெய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைபட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சிபெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் வேலைநாடுபவர்களும் வேலையளிப்போரும்https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்துபுது ப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம்.தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ண ப்பம் பெற்றுஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால்த ங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.இப்பணி முற்றிலும் இலவசமானது.

மேலும் விவரங்களுக்கு 0421-2999152-9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில்துறையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அத்தகையவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், இந்த முகாம் நாளை நடத்தப்படுவதால், முகாமில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!