திருப்பூர் மாவட்டத்தில், இன்று பிளஸ் 2 தேர்வு; தயார் நிலையில் 93 தேர்வு மையங்கள்

tirupur News, tirupur News today- திருப்பூரில், பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
tirupur News, tirupur News today- தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் இன்ற (13-ம் தேதி) முதல், ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 93 தேர்வு மையங்களில், 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். 93 தேர்வு மையங்களில் 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள், 214 தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 106 தலைமை ஆசிரியர்கள், 106 துறை அலுவலர்கள், 1,780 அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட உள்ளது. இந்த முன்னேற்பாடுகள் அனைத்தையும் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை
திருப்பூர் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நல்ல நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பூஜை கடந்த 26-ம் தேதி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தொடங்கியது. இதில் பிளஸ்-2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
3-வது வாரமாக நேற்று நடைபெற்ற இந்த யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது. இந்த பூஜையையொட்டி மாணவ-மாணவிகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் சுலோக அட்டை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தெளிவான நினைவாற்றலுடன் பாடல்களை படிக்கவும், பொதுத் தேர்வை மாணவ, மாணவியர் பதட்டமின்றி எழுதவும் இந்த வேள்வி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu