‘தாட்கோ’ மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

‘தாட்கோ’ மூலம் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
X

tirupur News, tirupur News today - ‘தாட்கோ’ மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. 

tirupur News, tirupur News today- பல்வேறு தேர்வுகளின் மூலம், 11,000 காலியான அரசு பணியிடங்கள், தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

tirupur News, tirupur News today-திருப்பூர் : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை;

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் http://ssc.nic.in_வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11,000 காலியான அரசு பணியிடங்கள், தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

இத்தேர்வில் ஆதிதிராவிடர் - பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி தனியார் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு,ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது 3முறைகளில் நடைபெற உள்ளது. இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். மேற்கண்ட தேர்வில் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும் என, கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில்,.நாளை மறுதினம் ( 17ம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை;

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே வேலைநாடுநா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் முகாமில் பங்கேற்கலாம்.

அதேவேளையில், வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த முகாமில் பங்கேற்பதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் பணியில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தப்பணி முற்றிலும் இலவசமானதாகும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story