திருப்பூரில் பெண் டாக்டர் கைது

திருப்பூரில் பெண் டாக்டர் கைது
X

tirupur News, tirupur News today- திருப்பூரில் பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தில், உரிய அனுமதி பெறாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டரை, போலீசார் கைது செய்தனர்.

tirupur News, tirupur News today- உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து விட்டு, திருப்பூர் அருகே உரிய அனுமதியில்லாமல் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையிலான சுகாதார துறை அதிகாரிகள் மங்கலம் நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கிளினிக்கில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பு படித்திருந்தது தெரிய வந்தது. ஆனால் அதன்பிறகு அவர் இந்திய மருத்துவ கழகத்தின் தேர்வை எழுதாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும் கிளினிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை, என்பதும் தெரிய வந்தது.

இதனால் அதிகாரிகள் அந்த தனியார் கிளினிக்கிற்கு 'சீல்' வைத்தனர். இதைத்தொடர்ந்து பிரியங்காவின் சான்றிதழ்களைப் பெற்று, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த இடத்திற்கு சென்று மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்யாமல், உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்த பிரியங்கா மீது இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரியங்காவை கைது செய்தனர்.

பெண் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!