திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்; அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்; அமைச்சர் கயல்விழி பங்கேற்பு
X

Tirupur News. Tirupur News Today- குண்டடம் பகுதியில், திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்க தொகை உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தி.மு.க.அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி கூறினார்.

Tirupur News. Tirupur News Today- தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் குறித்து சாதனை விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை அடுத்த நந்தவனம்பாளையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்தவனம்பாளையம் ஊராட்சிக் முன்னாள் செயலாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசியதாவது,

மகளிர் மேம்பாட்டுக்காக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மகளிர் சுய உதவி உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்குதல் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பஸ் வசதி மூலமாக பெண்களும், திருநங்கைகளும் பயன்படுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுமதி விஸ்வநாதன், பாலகிருஷ்ணன். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரன், குமரவேல், ஸ்ரீதர் உத்தரகுமார், ஒன்றிய அவைத் தலைவர் அர்ஜுனன், பொருளாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராணா பத்மநாபன், ருத்ராவதி பேரூர் முன்னாள் செயலாளர் முத்துக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!