திருப்பூர் கலெக்டரிடம் தகராறு; 8 பேருக்கு 13 மாதங்கள் சிறை

tirupur News, tirupur News today- திருப்பூர் கலெக்டரிடம் தகராறு செய்த, 8 பேருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை. (கோப்பு படம்)
tirupur News, tirupur News today- உடுமலை அருகே மனுநீதி முகாமல் கலந்து கொண்டு விட்டு திரும்பிய கலெக்டரின் காரை வழிமறித்து, தகராறு செய்த 8 பேருக்கு தலா 13 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, உடுமலை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த பெரிய பாப்பனூத்து பகுதியில் கடந்த 13.07.2016 அன்று கலெக்டரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். முகாம் முடிந்ததும் காரில் அப்போதைய கலெக்டர் ஜெயந்தி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது வாளவாடியைச் சேர்ந்த செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், வேலூரைச் சேர்ந்த அருள்பிரகாஷ், பூலாங்கிணரைச் சேர்ந்த விஜயசேகரன், சின்ன பாப்பனூத்தைச் சேர்ந்த சபாபதி, தங்கவேல், சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் கலெக்டர் காரை வழிமறித்து, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாப்பனூத்து கிராம நிர்வாக அலுவலர் பால்வாசகம் தளி போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீசார் இவர்கள் 8 பேர் மீதும் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இவர்கள் மீதான வழக்கு உடுமலை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மீனாட்சி விசாரித்து வந்தார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தினார்.
வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், விஜயசேகரன், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் ஒரு மாதம் சிறை தண்டனையும், தலா ரூ1500 அபராதமும், அபராதம் கட்ட தவரினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
கலெக்டரின் காரை வழிமறித்து தகராறு செய்த எட்டு பேருக்கு, 13 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu