திருப்பூர்; வரும் 5ம் தேதி போலீஸ் ஸ்டேஷன்களில் டூவீலர்கள் ஏலம்

திருப்பூர்; வரும் 5ம் தேதி போலீஸ் ஸ்டேஷன்களில் டூவீலர்கள் ஏலம்
X

tirupur News, tirupur News today- கேட்பாரற்று உள்ள டூவீலர்களை ஏலம் விட முடிவு (கோப்பு படம்)

திருப்பூர், தாராபுரம் பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள டூவீலர்கள், வரும் ஏப்ரல் 5ம் தேதி ஏலம் விடப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

tirupur News, tirupur News today- திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக 319 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று உள்ளன. 4 இருசக்கர வாகன நிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, வாகனங்களின் உரிமையை கோரலாம் என்று தெற்கு போலீசார் அறிவித்துள்ளனர்.

தாராபுரம் : தாராபுரம் தாலூகாவுக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் குண்டடம் போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வழக்குகள் தொடர்பாக மொத்தம் 86 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவைகள் தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.

தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் 6, அலங்கியம் போலீஸ் ஸ்டேஷனில் 26, குண்டடம் போலீஸ் ஸ்டேஷனில் 20, மூலனூர் போலீஸ் ஸ்டேஷனில் 34 என இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 5-ம் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பின்னர் மீதி தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!