தென்னை சாகுபடி செழிக்க, விவசாயிகளுக்கு ‘அட்வைஸ்’
Tirupur News. Tirupur News Today- தென்னை சாகுபடி செழிக்க, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடி செழிக்க, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி விவசாயிகள் செய்ய வேண்டியவை
தரமான தாய்மரத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான பருவத்தில் கன்றுக ளை நட வேண்டும். ஐந்து மாதத்துக்குள் முளைக்காத கன்றுகளை அகற்றி விட வேண்டும். 9 முதல் 12 மாத வயது உடைய கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும். குழிகளின் பக்கவாட்டில் மண்ணை அகற்றி கன்றுகள் வளர, வளர புதிய மண் இட வேண்டும். மழைக்காலத்தில் கன்றின் அடித்தண்டில் ஒட்டி இருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி நீர் வழியாக உரமிடுதல் நல்லது. மண் சோதனை மதிப்பீட்டு அளவுகளை கொண்டு, சரியான, தேவையான அளவு தொழு உரம் மற்றும் பிற உரங்களை இட வேண்டும்.குருத்து அழுகலை தடுக்க சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும்.
அடித்தண்டு அழுகலை கட்டுப்படுத்த, சொட்டு நீர் பாசனம் அவசியம். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது 45 நாட்கள் கழித்து காய்பறித்தல் நல்லது. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டுக்கு இயற்கை வழி பொருள்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும்.வீரிய ஒட்டு கன்றுகளை நல்ல நீர் வசதியுடன் நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறிகளை தோப்பின் ஓரத்திலோ அல்லது வெளியிலோ வைக்க வேண்டும்.
விவசாயிகள் தவிர்க்க வேண்டியவை
வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம், குப்பை மேடு பக்கத்தில் மட்டும் பிற வசதியான இடங்களில் வளரும் தென்னை மரங்களை தாய் மரமாக தேர்வு செய்யக்கூடாது. தென்னந்தோப்பை அடிக்கடி உழவு செய்தல் கூடாது. அதிகமான தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்படாத உரங்களை விடக்கூடாது. வேர்கள் மற்றும் தண்டுகளில் காயம் ஏற்படுத்தக் கூடாது. பச்சை இலைகளை வெட்டக்கூடாது.
முதிர்ச்சி அடையாத காய்களை, விதை காய்களாக தேர்வு செய்யக்கூடாது.தாழ்வான பகுதிகளில் மழை நேரத்தில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். பரவல் பாசன முறையை பின்பற்றக் கூடாது.இனக்கவர்ச்சி பொறிகளை நேரான சூரிய வெளிச்சத்தில் வைக்கக் கூடாது. குருத்துப் பகுதியில் பரிந்துரைக்கப்படாத பூச்சி கொல்லி மருந்துகளையே அல்லது திரவ நுண்ணுயிர் உரங்களையோ, உயிர் கொல்லியையோ தெளித்தல் கூடாது என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu