திருப்பூரில் 10ம் வகுப்பு படித்த ‘டாக்டர்’ கைது

திருப்பூரில் 10ம் வகுப்பு படித்த ‘டாக்டர்’ கைது
X

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் 10-ம் வகுப்பு படித்த,  போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Tirupur News. Tirupur News Today- 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு, திருப்பூரில் 9 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் கரட்டாங்காட்டில் செயல்பட்டு வந்த தனியார் கிளினிக் குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி திருப்பூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அந்த கிளீனிக்குக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மருத்துவமனை போல் படுக்கைகள், பிரத்யேக வார்டு அமைத்து 24 மணி நேரமும் இயங்கியது தெரியவந்தது. அங்கு செவிலியர்கள் இருந்தனர். அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் கடந்த 13-ம் தேதி இரவு கிளினிக்கை பூட்டி 'சீல்' வைத்தனர். இதையடுத்து கிளினிக்கை நடத்தி வரும் பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 48) நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அண்ணாத்துரை, தான் வைத்திருந்த மருத்துவ படிப்பு ஆவணங்களுடன் ஆஜரானார். அந்த ஆவணங்களை இணை இயக்குனர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுர்வேதம் படித்ததாக வைத்திருந்த ஆவணங்கள் போலியானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்யுமாறு திருப்பூர் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்ததார்.

இதுகுறித்து இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது,

அண்ணாத்துரை, கடந்த 25 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். அவரிடம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மட்டுமே உள்ளது. ஆனால், ஆயுர்வேத மருத்துவம் பயின்றதைப்போல் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை. ஆனால் புரோக்கர் மூலமாக ரூ.12 லட்சம் கொடுத்து சான்றிதழ் பெற்றதாக கூறினார். இவர் 2014-ம் ஆண்டு இந்த கிளினிக்கை தொடங்கி நடத்தி வந்துள்ளார். செவிலியர்கள் பணியாற்றியுள்ளனர். மருந்து, மாத்திரைகளை அவரே எழுதிக்கொடுத்துள்ளார். அவர் சிகிச்சை அளித்தது ஆச்சரியமாக உள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக ஆங்கில சிகிச்சை அளித்த அண்ணாத்துரையை போலீசிடம் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலி ஆவணங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை அளித்த அண்ணாத்துரையை, தெற்கு போலீசார் கைது செய்தனர்.

‘உயிருடன்’ விளையாட்டு

திருப்பூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோல் போலி டாக்டர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இன்னும் கண்டறியப்படாமல், எத்தனை போலி டாக்டர்கள், தமிழகத்தில் உள்ளனரோ, என்ற சந்தேகம், அதிர்ச்சியைத் தருகிறது. திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான வேளைகளில் டாக்டரிடம், நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுகிின்றனர். அந்த ஆபத்தான நேரத்தில் டாக்டர் தரும் மருந்தும், சிகிச்சையும்தான் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுகிறது. அதனால்தான், டாக்டர்களை கடவுளுக்கு ஒப்பானவர்களாக, குறிப்பிடுகின்றனர். ஆனால், அதே ஆபத்தான வேளையில், போலி டாக்டராக இருப்பவர்கள் தவறான மருந்தும், சிகிச்சையும் தந்துவிட்டால் அது ஆபத்தை இன்னும் மோசமாக்கும்.

இப்படி மக்கள் ‘உயிருடன்’ விளையாடும் போலி டாக்டர்கள் மீது, தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட போலி டாக்டர்களுக்கு தரப்படும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது