திருப்பூர் கோவில்வழியில் ரூ. 26 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட்
Tirupur News- திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சி சார்பில் கோவில்வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 3- வது பஸ் ஸ்டாண்டாக அமையும் இந்த பஸ் ஸ்டாண்ட் 26 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. திருப்பூருக்கு தாராபுரம் வழியாக வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் வந்து திரும்பும் வகையில் பிரதான வளாகம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வளாகம் ஆகிய பிரிவுகளாக கட்டப்படுகிறது. இதில் மேற்கு வளாகத்தில், 8 பஸ் ரேக்குகள், 15 கடைகள், காத்திருப்பு அறை, போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமைய உள்ளது.
முதல் தளத்தில் பொருள் பாதுகாப்பு அறை, அறிவிப்பு மையம், கேமரா பதிவு கண்காணிப்பு அறை, நிர்வாக அலுவலகம், ஊழியர் அறை ஆகியன அமையவுள்ளது. தெற்கு வளாகத்தில் 15 பஸ்கள் நிற்கும் வகையிலான ரேக்குகள் மற்றும் 11 கடைகள் அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறை, ஏ.டி.எம்., அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்டவை அமைகிறது. மேற்கு பகுதியில் அமையும் வளாகம் 5 பஸ் ரேக்குகள் , ஊழியர்கள் அறை மற்றும் சுகாதார பிரிவு அலுவலகம் ஆகியவற்றுடன் கட்டப்படுகிறது. மைய வளாகம் 14 பஸ் ரேக்குகள், 10 கடைகள், நேரக்காப்பாளர் அறை ஆகியவற்றுடன் அமைகிறது.
மேலும் அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது. இவற்றுடன் இரு சக்கர வாகன பார்க்கிங் வளாகமும் இங்கு அமையவுள்ளது. இதையடுத்து பூமி பூஜை நடத்தி பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. தற்போது இதில் முதல் கட்டமாக மத்திய வளாகம் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்ட் செயல்பாடு பாதிக்காத வகையில், ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu