டெல்லியில் அமைச்சர்களை சந்தித்து மனு அளித்த திருப்பூர் விவசாயிகள்

டெல்லியில் அமைச்சர்களை சந்தித்து மனு அளித்த திருப்பூர்  விவசாயிகள்
X

Tirupur News,Tirupur News Today- டெல்லியில் அமைச்சரை சந்தித்த, உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள்.

Tirupur News,Tirupur News Today- உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள், டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

Tirupur News,Tirupur News Today- டெல்லியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, மகளிர் அணி தலைவி ராஜரீகா, கோவை மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், அதிமுக., திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து, பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தென்னை விவசாயிகள் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் இருக்கின்ற தண்ணீரை கொண்டு தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அதனால் தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தென்னை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

அதே சமயம் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை அரசின் மானியத்தில் குறைந்த விலைக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அருகில் உள்ள கேரளாவில் தேங்காய் எண்ணெய் வீட்டு சமையல், நொறுக்கு தீனி உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசும் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மட்டும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேகதாது நதியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பனை கட்ட திட்டமிட்டுள்ளதை தடுக்க வேண்டும் என்றதற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்றும் காவேரி நதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் ஆணையிட மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். 100 நாள் வேலை திட்ட வேலை ஆட்களை விவசாய வேலைக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

இது குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு செல்லமுத்து கூறினார்.

அப்போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!